“தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” : பாஜக தலைவர் முருகன் அறிக்கைக்கு அமைச்சர் பதில்!

“தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” : பாஜக தலைவர் முருகன் அறிக்கைக்கு அமைச்சர் பதில்!

மத்திய அரசு நடைமுறை படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும். தமிழ் மொழிக்கோ அல்லது தமிழுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

“தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” : பாஜக தலைவர் முருகன் அறிக்கைக்கு அமைச்சர் பதில்!

இதுகுறித்து குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை 3ஆவது மொழியாக படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கவில்லை என தெரிந்தும் அரசியல் செய்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” : பாஜக தலைவர் முருகன் அறிக்கைக்கு அமைச்சர் பதில்!

இந்நிலையில் பாஜக தலைவர் எல்.முருகனுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர; மொழி கற்றுக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.