தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை; இருமொழி கொள்கையே தொடரும்: முதல்வர் திட்டவட்டம்

 

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை; இருமொழி கொள்கையே தொடரும்: முதல்வர் திட்டவட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில், பெருமளவிலான மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். 21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமையும் என்று கூறப்படுகிறது. அதே போல புதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வழிமொழிகிறது.

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை; இருமொழி கொள்கையே தொடரும்: முதல்வர் திட்டவட்டம்

அதனால், புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும். தமிழ் மொழிக்கோ அல்லது தமிழுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

மேலும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு ஏற்ப கொள்கையை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.