’இது 1960 அல்ல… இரட்டை வேடம் கிழிக்கப்படும்’ மும்மொழி கல்வி குறித்து பாஜக ஹெச்.ராஜா ஆவேசம்

 

 ’இது 1960 அல்ல… இரட்டை வேடம் கிழிக்கப்படும்’ மும்மொழி கல்வி குறித்து பாஜக ஹெச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தின் ஹாட் டாபிக் ‘புதிய கல்விக் கொள்கை’ பற்றிதான். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதுகுறித்து கருத்துகளை ஆக்ரோஷமாக வெளியிட்டு வருகிறார்கள். அதனால், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் தொடந்து புதிய கல்விக் குறித்த பேச்சுதான்.

புதிய கல்விக் கொள்கை’ இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு (2019) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தது. அதன்மீது நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

 ’இது 1960 அல்ல… இரட்டை வேடம் கிழிக்கப்படும்’ மும்மொழி கல்வி குறித்து பாஜக ஹெச்.ராஜா ஆவேசம்

புதிய கல்விக் கொள்கையில் தமிழகக் கட்சிகள் (ஓரிரு கட்சிகள் தவிர) ஒருமுனையில் நின்று எதிர்ப்பது மும்மொழிக் கல்வித் திட்டத்தைத்தான். புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை அம்சத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து இரு மொழி கல்வியே நீடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 ’இது 1960 அல்ல… இரட்டை வேடம் கிழிக்கப்படும்’ மும்மொழி கல்வி குறித்து பாஜக ஹெச்.ராஜா ஆவேசம்

இந்நிலையில் மும்மொழி கல்வியை தீவிரமாக ஆதரிக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கடும் விமர்சனத்தை திராவிடக் கட்சிகள் மீது வைக்கத் தொடங்கியுள்ளனர். அக்கட்சியின் தேசிய செயலாளர். ‘இது ஒன்றும் 1960 ஆம் வருஷம் அல்ல’ என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம்.

இது 1960கள் அல்ல. ஏற்கனவே திமுக முன்னனி தலைவர்கள் நடத்தும் மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளேன். மேலும் தமிழகம் முழுவதும் திராவிட இயக்க தலைவர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் எடுக்கும்படி தேசிய சிந்தனையாளர்களிடம் கேட்டுள்ளேன்.இவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் புதிய கல்விக் கொள்கை விவகாரம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.