அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!

அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்பிலிருந்த மூன்று மத்திய அமைச்சர்கள் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நிலையில் இந்தியா உள்ளது. தினமும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாத் தொற்று ஏற்படுகிறது. இதை நிலை நீடித்தால் விரைவில் இந்தியாவில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படும் நிலை வரும் என்று எச்சரிக்கப்படுகிறது.
ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் அடித்துவந்தன. கடைசியில் அமித்ஷாவுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!

அமித்ஷா தற்போது குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும்போது தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அமித்ஷாவுடன் தொடர்பிலிருந்த ரவி சங்கர் பிரசாத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக நேற்று அறிவித்தார். நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்றாலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.

அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!
அதே போல் மத்திய அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோவும், கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணைத் தலைவரும் இந்தியக் கலாச்சார உறவுகள் கவுன்சில் தலைவருமான வினய் சஹஸ்ரபுத்தே உள்ளிட்டோரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். கடந்த சனிக்கிழமை அமித்ஷாவுடன் இணைந்து வினய் சஹஸ்ரபுத்தே லோக்மான்ய பால கங்காதர திலகர் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்தே அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அமித்ஷாவுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் சிலரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி வருகின்றனர்.