ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினி வழங்க அறிவுறுத்தல்!

 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினி வழங்க அறிவுறுத்தல்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து விட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போது பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா அதிகமாக பரவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் நாளை தமிழகத்தில் தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினி வழங்க அறிவுறுத்தல்!

இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மாஸ்க், கையுறை, கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும் என்று மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்பிரமணியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஜிங்க், வைட்டமின் அடங்கிய சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்ற மருந்துகளையும் வழங்க வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள கடை ஊழியர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.