‘கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வு காட்ட வேண்டாம்’.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

 

‘கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வு காட்ட வேண்டாம்’.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மதுரை, தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

‘கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வு காட்ட வேண்டாம்’.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே கொரோனா நோயாளிகளை தீண்டத்தகாதவர்கள் போல மக்கள் நடத்துவது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வு காட்ட வேண்டாம் என புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வு காட்டாமல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து பாதுகாப்புடன் விலகி இருந்து உதவிகளை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.