புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் நாராயணசாமி பதில்

 

புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் நாராயணசாமி பதில்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகல் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,293 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 114, காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,292 ஆக உள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆகவும் உயிரிழப்பு 48 ஆகவும் உள்ளது.

புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் நாராயணசாமி பதில்

இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு புதுச்சேரியில் அமலில் இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார். அதாவது. புதுச்சேரியில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து நாளை அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றும் நிவாரண நிதியில் இருந்து ரூ.1.2 கோடி ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.975 கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.