‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி’.. முதல்வர் பழனிசாமி உரை

 

‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி’.. முதல்வர் பழனிசாமி உரை

தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீட்டித்த அந்த ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்தது. அக்கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு, தளர்வுகள் உட்பட பல நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி’.. முதல்வர் பழனிசாமி உரை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்த முதல்வர், தமிழக அரசின் நடவடிக்கையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும் கொரோனா பாதிப்பும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் மாஸ்க் வழங்கப்பட்டு வருவதாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 2 முறை ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் சென்னையில் ஆயிரக் கணக்கான கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறினார்.

‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி’.. முதல்வர் பழனிசாமி உரை

அதே போல, பொதுமுடக்கம் அமலில் இருக்கும் இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நாளைக்கு 63 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் காய்ச்சல் முகாம்கள் மூலமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறை பணியாளர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கொரோனாவில் இருந்து நாம் மீள மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.