‘3 மணி நேரமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை’.. இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர்!

 

‘3 மணி நேரமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை’.. இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.

‘3 மணி நேரமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை’.. இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர்!

ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீட்டித்த அந்த ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்தது. அக்கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு, தளர்வுகள் உட்பட பல நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கிறதா, இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றவிருக்கிறார். அப்போது பல முக்கிய தகவல்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.