அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு  : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர் . முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு  : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள், ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டதிற்கு பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவு தெரியவரும் என்று கூறப்பட்டது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு  : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேட்டி அளித்த போது, “சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதலமைச்சர் ஓபிஎஸூம்  செயல்பட்டு வருகிறார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை  அதிமுகவினர் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.