அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை!

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குழப்பம் தீருவதற்குள் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியது அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை!

ஒருபுறம் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என்று கூறிய நிலையில், எடப்பாடி தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்துக் கூறுவது அதிமுகவை பலவீனப்படுத்துவதாக இருக்கும் என ஆழமான கருத்தை முன்வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். இப்படி இந்த விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர்களே வேறுபட்ட கருத்தை கூறி வருகிறார்கள்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை!

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள், ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டதிற்கு பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.