“பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல அதிமுக ஆகிவிட்டது” : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சனம்!

“பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல அதிமுக ஆகிவிட்டது” : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சனம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியது அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அக்கட்சியின் தலைவர் ஏ. எல். முருகனோ அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மேலும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

“பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல அதிமுக ஆகிவிட்டது” : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சனம்!
இதையடுத்து விபி துரைசாமியின் பேட்டிக்கு பதிலளித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும் என்றும் பாஜக கூட்டணி பற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி அலைப்பறைகளை எதிர்க்கட்சிகள் கவனித்தும், விமர்சித்தும் வருகின்றன.

“பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல அதிமுக ஆகிவிட்டது” : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சனம்!

இந்நிலையில் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல அதிமுக ஆகிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டது என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.