விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் – உயர் நீதிமன்றம் அனுமதி!

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் – உயர் நீதிமன்றம் அனுமதி!

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் – உயர் நீதிமன்றம் அனுமதி!

விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பெரிய சிலைகள் ஆங்காங்கே நிறுவி அதை வழிபாடு நடத்தி பின்பு அச்சிலைகளை கடலில் கரைப்பது வழக்கமாக நடைபெறும் முறையாகும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் – உயர் நீதிமன்றம் அனுமதி!

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் தளர்வுகள் அளிக்க இயலுமா என்ற உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த வகையில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.