மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆன்லைன் வகுப்பால் மாணவர்களுக்கு பயன் இல்லை எனவும் மாணவர்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும் எனவும் பல்வேறு கருத்துகள் எழுந்துவருகின்றன. டிசம்பர் மாதம் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என கூறப்படுகிறது. இதனிடையே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கும் நிலையில், கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

இந்த நிலையில், அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் எதற்காக கட்டணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். மேலும், கொரோனா குறைந்த உடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.