விநாயகர் சதுர்த்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பெரிய சிலைகள் ஆங்காங்கே நிறுவி அதை வழிபாடு நடத்தி பின்பு அச்சிலைகளை கடலில் கரைப்பது வழக்கமாக நடைபெறும் முறையாகும்.

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

ஆனால் இம்முறை கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வேகமெடுக்கும் சூழ்நிலையில் இந்த கொண்டாட்டமானது மக்களுக்கு தொற்றை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் தமிழக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “விநாயகரின் அவதார திருநாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர் என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துவதாக” அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.