“தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” : முதல்வர் பழனிசாமி புகழாரம்!

“தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” : முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி சுதந்திர தினமான நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” : முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பையை பெற்று தந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு விக்கெட் கீப்பராக தனது பணியைச் சிறப்பாகச் செய்து வந்த அவர் விராட் கோலியை இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தி வந்தார்.

“தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” : முதல்வர் பழனிசாமி புகழாரம்!

தல, கூல் கேப்டன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் தற்போது ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் பலரும் அவரின் புகழ் பாடி வருகின்றனர்.

இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் , “இந்திய முன்னாள் வீரர் தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும். சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் கூல் தோனியின் பெயர் நினைவில் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.