குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

 

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார். தனக்கு இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் தோனி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தோனி அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும், தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட் அணியில் உங்கள் பங்களிப்பு மகத்தானது, நாம் ஒன்றாக இணைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது என்னுடைய வாழ்க்கையிலேயே சிறப்பான தருணம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் 2 வது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்க வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.