×

தமிழகத்தில் தியேட்டர்கள் தற்போது திறப்பதாக இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் திரைத்துறையை பொறுத்தவரையில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையுலகம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், விரைவில் தியேட்டர்கள் திறக்கவேண்டும் எனவும் திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிகளவில் மக்கள் கூடுவர்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் திரைத்துறையை பொறுத்தவரையில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையுலகம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், விரைவில் தியேட்டர்கள் திறக்கவேண்டும் எனவும் திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க தற்போது வாய்ப்பில்லை. ஓடிடியில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து. குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் இயக்க அனுமதி தந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் . வேறு வழியின்றி படங்களை ஓடிடியில் வெளியிடுவதை விட சில காலம் பொறுத்திருப்பது நல்லது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக முன்னணி நடிகரான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது கவனிக்கத்தக்கது.