ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லை. வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் தாக்குதல் போல் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 54 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடி பிரச்சினை என்பது திரைப்படதுறையினருக்கு மட்டுமல்ல உலகளவிய பிரச்னை. ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு இதனை தடுக்க முடியும் என்றால் எப்போதோ தடுத்து இருப்போம். ஆனால் அரசு நேரடையாக தடுக்க முடியாது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பிரபல திரை நட்சத்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பேசி இது குறித்து முடிவு எடுக்க அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.