×

சென்னையில் ‘டாஸ்மாக்’ ஓபன் : குஷியில் ‘குடி’ மகன்கள்!

கொரோனா பேரிடர் காலத்தில் சென்னையில் 5 மாதத்திற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமானாலும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதால் சென்னையில் பாதிப்பு குறைந்து டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள், டாஸ்மாக்கில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், வாடிக்கையாளர்கள் 3 மீட்டர் இடைவெளியுடன் நிற்கும் வகையில் 50 வட்டங்கள் போட
 

கொரோனா பேரிடர் காலத்தில் சென்னையில் 5 மாதத்திற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமானாலும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதால் சென்னையில் பாதிப்பு குறைந்து டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள், டாஸ்மாக்கில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், வாடிக்கையாளர்கள் 3 மீட்டர் இடைவெளியுடன் நிற்கும் வகையில் 50 வட்டங்கள் போட வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டது.

இந்நிலையில் சென்னையில் 6 மாதத்திற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கபட்டுள்ளதால் மதுகுடிப்போர் சரக்குகளை மகிழ்ச்சியுடன் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.  டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை திறக்கப்படும் நிலையில் வணிக வளாகங்கள், தொற்று கட்டுபாட்டு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கபடவில்லை.