சாமியானா, மைக் செட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

சாமியானா, மைக் செட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 60 நாட்களாக தமிழகத்தில் டாஸ்மாக்குகள் மூடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக்கை திறக்க அரசு முடிவெடுத்து, சென்னையை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக்கை திறந்தது. அதன் படி, எல்லா டாஸ்மாக்குகளிலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் அங்கும் டாஸ்மாக்குகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் மதுபிரியர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

சாமியானா, மைக் செட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த நிலையில் சென்னையில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதாவது சாமியானா, மைக் செட்டுடன் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும் டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே தர வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் 3 மீட்டர் இடைவெளியுடன் நிற்கும் வகையில் 50 வட்டங்கள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.