சென்னையில் அவசரமாக டாஸ்மாக்கை அரசு திறப்பது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி

 

சென்னையில் அவசரமாக டாஸ்மாக்கை அரசு திறப்பது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி

கொரோனவால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அதிகமாக சென்னையில் பரவியதால், அங்கு மட்டும் டாஸ்மாக் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால், மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக்குகளை நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே தர வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் 3 மீட்டர் இடைவெளியுடன் நிற்கும் வகையில் 50 வட்டங்கள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சென்னையில் அவசரமாக டாஸ்மாக்கை அரசு திறப்பது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி

டாஸ்மாக்குகள் எப்போது திறக்கும் என காத்திருந்த சென்னை குடிமகன்களுக்கு, இது ஒரு இன்பச் செய்தியாகவே இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் திறப்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பிறமாவட்ட கொரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.