×

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு: மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினர். பெண் ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தினாலேயே சமூக வலைத்தளங்களில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை பார்வைகளை ஆபாசமாக கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தும் செயல் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அவதூறு பரப்பும் செயல் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்
 

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.

பெண் ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தினாலேயே சமூக வலைத்தளங்களில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை பார்வைகளை ஆபாசமாக  கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தும் செயல் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அவதூறு பரப்பும் செயல் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.