நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : ஸ்டெர்லைட் சிஇஓ பேட்டி

 

நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : ஸ்டெர்லைட் சிஇஓ பேட்டி

தூத்துக்குடியில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து சென்னைக்கு உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை தொடரும் என்ற 800க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : ஸ்டெர்லைட் சிஇஓ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்தனர். அதே போல தூத்துக்குடி மக்களும் இதற்கு வரவேற்பு அளித்து, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டெர்லைட் சிஇஓ பங்கஜ் குமார் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், ஆலை மூடினால் நாட்டிற்கே பேரிழப்பு ஏற்படும் என்றும் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் ரீதியான காரணங்களால் ஆலை மூடப்பட்டதாகவும் சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறினார்.