கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம்! – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம்! – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிக்காக நிலத்தைக் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான விமான நிலையங்களுள் கோவையும் ஒன்று. இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ரன்வேயின் தூரத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டது. பயணிகளுக்கான வசதியை

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம்! – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

அதிகரிக்க ரூ.5 ஆயிரம் கோடியில் அரசு திட்டம் தயார் செய்தது. விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக அந்த பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியது.
பலரும் நிலத்தை ஒப்படைத்துவிட்டு இழப்பீடு பெற்றுக் கொண்டனர். சிலர் நிலத்தை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம்! – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணை நடத்து வந்தது.
இந்த வழக்கில், நிலத்தை அளிப்பவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இழப்பீடு தொகையைப் பெற நில உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம்! – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று இன்று தீர்ப்பளித்தது. மேலும், இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் கோவை நாட்டின் டாப் 2௦ விமானநிலையங்கள் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.