சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!

 

சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!

சென்னையில் 5 மாதங்கள் கழித்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈக்காட்டுத்தாங்கலில் மக்கள் பாதை இயக்கத்தினர் போராட்டத்தினர் உள்பட பலரும் டாஸ்மாக் மதுகடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!
சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்தது போல குறைந்து தற்போது உயரத் தொடங்கியுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதம் கழித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால், அவர்கள் குடும்பத்தினர், பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அவர் மரணத்துக்குப் பிறகு அந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. சென்னையில் மதுக்கடைகள் ஆறு மாதமாக மூடப்பட்ட நிலையில் இது மதுவிலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!
சென்னையில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் பலரும் பக்கத்து மாவட்ட எல்லை வரை சென்று மது வாங்கினர். சிலர் அவ்வளவு தூரம் செல்ல முடியாத காரணத்தால் குடிப்பதையே நிறுத்தியிருந்தனர். இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது அப்படிப்பட்ட குடி மகன்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாத விரதம் முடிந்து மது குடிக்க பலரும் காலை முதலே கடைக்குச் சென்று வருவதைக் காண முடிகிறது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் போராட்டம்!
தமிழக அரசின் டாஸ்மாக் கடை திறப்புக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஈக்காட்டுத்தாங்கலில் மக்கள் பாதை இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதே போன்று வேறு சில இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது வருகிறது. அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மது விலக்கை அறிவிப்பும் என்று எதிர்பார்த்தார், கடையை திறந்துள்ளதே என்று மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.