×

நகைக் கடன் விவகாரம்… ஆர்ப்பாட்டம் ரத்து! காரணம் சொல்லும் விவசாயிகள் சங்கம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் எளிதில் அணுகும் விதத்தில் இருக்கின்றன. எனவே, அவர்கள் நகையை அடகு வைக்க முதலில் தேர்ந்தெடுப்பது இக்கூட்டுறவு வங்கிகளையே… வட்டி குறைவு என்பதும் ஒரு காரணம். ஆனால், சில நாள்களுக்கு முன் நகைக்கடன் வழங்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு வந்ததால், கடன் வழங்காத சூழல் இருந்தது. பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கூட்டுறவு வங்கிகளை நகைக்கடன் வழங்கக்கூடாது என்று உத்தரவு இடவில்லை. வழக்கம்போல கடன் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
 

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் எளிதில் அணுகும் விதத்தில் இருக்கின்றன. எனவே, அவர்கள் நகையை அடகு வைக்க முதலில் தேர்ந்தெடுப்பது இக்கூட்டுறவு வங்கிகளையே… வட்டி குறைவு என்பதும் ஒரு காரணம். ஆனால், சில நாள்களுக்கு முன் நகைக்கடன் வழங்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு வந்ததால், கடன் வழங்காத சூழல் இருந்தது. பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கூட்டுறவு வங்கிகளை நகைக்கடன் வழங்கக்கூடாது என்று உத்தரவு இடவில்லை. வழக்கம்போல கடன் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நகைக்கடன் வழங்கப்படாததைக் கண்டித்து 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்த்ருந்து. இப்போது அந்த ஆர்ப்பாட்டம் ரத்து என்ற செய்தி தெரிய வந்துள்ளது.

ஆர்ப்பாட்டம் ரத்து குறித்து தமிழ்நாடுவிவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கு ஜுலை 14ந் தேதி முதல் தடைவிதித்திருந்தது. தமிழக அரசின் இந்த தடாலடியான நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக ஜுலை 17 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (16.7.2020) பிற்பகல் கூட்டுறவுத்துறையின் சார்பில் 16ந் தேதி முதல் வழக்கம் போல் நகைக்கடன் வழங்கலாம் என்று கூட்டுறவு வங்கி களை செயலாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளனர். நகைக்கடன் வழங்குவதற்கான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிககை ஏற்கப்பட்டதால் 17ந் தேதி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடன் தள்ளுபடி, நிபந்தனைகள் இன்றி கடன் வழங்க வேண்டும், கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜுலை 17ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.