கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை: முதல்வர் பழனிசாமி

 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை: முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க இன்று காலை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை: முதல்வர் பழனிசாமி

அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உட்பட எந்த கடனும் நிறுத்தப்படவில்லை என்றும் அங்கு நகைக்கடன் வழங்குவதற்கு என வரம்பு உள்ளது என்றும் அரசின் நிதி நிலைமைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என்றும் முதல்வர் கூறினார்.