கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் நிறுத்திவைப்பு!

 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் நிறுத்திவைப்பு!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல் நகர, மத்திய – மாநில கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் நகைக்கடன் வழங்கி வந்தார்கள். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் நிறுத்திவைப்பு!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாகவே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்படுவதில்லை என விவசாயிகளும், பொதுமக்களும் புகார் கூறுகின்றனர். கூட்டுறவு வங்கிகள் மூலம் எந்த கடனுமே தரமுடியாதபடி இணையதள சர்வர் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.