கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு!

 

கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல் நகர, மத்திய – மாநில கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் நகைக்கடன் வழங்கி வந்தார்கள். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாகவே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்படுவதில்லை என விவசாயிகளும், பொதுமக்களும் புகார் கூறினர். இதுகுறித்து கூறிய தமிழக முதல்வர், தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உட்பட எந்த கடனும் நிறுத்தப்படவில்லை என்றும் அங்கு நகைக்கடன் வழங்குவதற்கு என வரம்பு உள்ளது என்றும் அரசின் நிதி நிலைமைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு!

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.