×

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 374 கர்ப்பிணிகள் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கொடிய நோயால் காவலர்களும், மருத்துவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா நோயாளிகள் இணையதளத்தில் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி ஓ.பி.டி.திட்டத்தில் மூலம் 6,471 பேர் பயனடைந்துள்ளதாகவும் அதில்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கொடிய நோயால் காவலர்களும், மருத்துவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா நோயாளிகள் இணையதளத்தில் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி ஓ.பி.டி.திட்டத்தில் மூலம் 6,471 பேர் பயனடைந்துள்ளதாகவும் அதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 374 கர்ப்பிணிகள் குணமடைந்து விட்டதாக தெரிவித்தார்.