×

வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வரலாம்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது.

இதனிடையே கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதில் போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்து சென்றதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில் பணிக்காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து மீண்டும் தமிழகம் வர நினைக்கும் தொழிலாளர்கள் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் திரும்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை அந்தந்த தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு பாசிடிவ் என்று வந்தால் அவர்களுக்கான சிகிச்சை கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.