சிங்கப்பூரில் 600 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரியாணி அளித்த தம்பதி

 

சிங்கப்பூரில் 600 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரியாணி அளித்த தம்பதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு தம்பதி 600 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி விருந்து அளித்தனர்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு மாதத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் ரம்ஜானை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்களது தங்குமிடங்களில் அடைந்து கிடக்கும் சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில், ரம்ஜான் விருந்து அளித்து அவர்களை உற்சாகப்படுத்த சிங்கப்பூரில் உள்ள வணிகர் துஷ்யந்த் குமார், அவரது மனைவி மற்றும் சமையல்காரர்கள் குழு நேற்று மாலை பிரியாணி சமைத்தனர். பின்னர் சுமார் 600 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரியாணி அளித்தனர்.

இதுகுறித்து துஷ்யந்த் குமார் கூறுகையில் “இந்த ரம்ஜான் நேரத்தில் எப்போதும்போல அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் உணவருந்தி இருப்பார்கள். ஆனால் கொரோனாவால் இங்கே இவர்கள் தனியாக அல்லல்படுகிறார்கள். பிரியாணி விருந்து மூலம் அவர்கள் முகத்தில் தெரிந்த புன்னகையால் மனநிறைவு கொண்டோம்” என்று கூறினார்.