தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் : தமிழக அரசு

 

தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் : தமிழக அரசு

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் : தமிழக அரசு

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் வசித்த தமிழர்கள் 66 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :-

சென்னை- 19,057 பேர்
திண்டுக்கல்- 16,793 பேர்
மதுரை-3,126 பேர்
தூத்துக்குடி 3,607 பேர் மேற்கூறிய இவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.