மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது: பிரதமர் மோடி

 

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது: பிரதமர் மோடி

உயர் செயல்திறன் கொண்ட கொரோனா சோதனை வசதி மையங்களை மூன்று நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சோதனை மையங்கள், கொரோனாவை எளிதில் கண்டறிந்து துரிதமாக சிகிச்சை அளிக்கும் முறையை வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று உயர் செயல்திறன் கொண்ட கொரோனா சோதனை வசதி மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பேரின் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது: பிரதமர் மோடி

இந்நிலையில் மும்பை, நொய்டா, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய நரேந்திர மோடி, “சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. உலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது” எனக் கூறினார்.