×

திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர் படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி அதிரடி நடவடிக்கைகள்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர் படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருச்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் அதிகரித்து வருவதால் சமூகப்பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் திருச்சியில் 2 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ கூட்டமைப்பு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதாக உயர்நீதிமன்றக்கிளை அறிவித்துள்ளது.