திருச்சியில் இந்த பகுதியெல்லாம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு!

 

திருச்சியில் இந்த பகுதியெல்லாம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு!

திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகியவை நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதன்படி திருச்சி கடைவீதிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் முக்கிய கடைவீதிகளை நோய்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் இந்த பகுதியெல்லாம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு!

இன்று இரவிலிருந்து 17ஆம் தேதி அதிகாலை வரை சின்ன செட்டித்தெரு, கம்மாள வீதி, என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகிய சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருச்சியில் இதுவரை 1,170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.