முழு ஊரடங்கு முடியும் வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

 

முழு ஊரடங்கு முடியும் வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த 4 மாவட்டங்களிலும் வரும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் முழு ஊரடங்கை சமாளிக்க காய்கறிகளை வாங்கிச் செல்ல மார்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சமூக விலகல் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தற்போது 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு முடியும் வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

இந்நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றன. முழு ஊரடங்கை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதை, கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுகின்றன