×

41 நாட்களுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா : மதுரையில் குறைகிறதா தொற்று?

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11, 546ஆக அதிகரித்துள்ளது.41 நாட்களுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி மதுரையில் 97 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.