`மதுரையில் வீழ்ந்தது டாஸ்மாக் விற்பனை; கைவிட்ட குடி மன்னர்கள்!’- அரசுக்கு 50 சதவிகிதம் வருமானம் `கட்’

 

`மதுரையில் வீழ்ந்தது டாஸ்மாக் விற்பனை; கைவிட்ட குடி மன்னர்கள்!’- அரசுக்கு 50 சதவிகிதம் வருமானம் `கட்’

தொடர் ஊடரங்கால் மதுரையில் டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு 50 சதவிகிதம் வருவாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் ஓரளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துவிட்டதுதான் காரணம், 40 நாட்களுக்கு மேல் இருந்து வந்த தங்கள் விரதத்தை குடி மன்னர்கள் முடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

`மதுரையில் வீழ்ந்தது டாஸ்மாக் விற்பனை; கைவிட்ட குடி மன்னர்கள்!’- அரசுக்கு 50 சதவிகிதம் வருமானம் `கட்’

உயர்நீதிமன்றத்தில் உத்தரவு காற்றில் பறந்ததால் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இந்த தடையை உச்சநீதிமன்றம் சென்று நீக்கியது தமிழக அரசு. இதையடுத்து, சென்னை தவிரத்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடும்பங்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசு வருவாயை நிரப்பியது. ஒட்டுமொத்த மதுவிற்பனையில் தொடர்ந்து மதுரை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பிற தென் மாவட்டங்களை சேர்க்காமல் மதுரை மாவட்டத்தை மட்டும் தனியாக பார்த்தால் மதுரையின் மதுபான விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்டம் என இரு பிரிவுகளாக மது விற்பனை நடைபெறுகிறது.

மதுரை வடக்கு பகுதியை பொறுத்தவரை ஒரு நாள் மது விற்பனை சராரசரியாக 1.60 கோடி ரூபாய். மதுரை தெற்கு பகுதியின் ஒரு நாள் சராசரி மது விற்பனை 1.50 கோடி ரூபாய். இவை தான் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை இருந்த தினசரி மதுபான விற்பனை. காலையில் கடை திறந்தததில் இருந்து கடை மூடும் வரை மதுரையில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும். நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல், மாவட்டத்தில் வருவாய் தந்த பெரிய வர்த்தமாக மதுரையில் டாஸ்மாக் விளங்கியது. பல்வேறு ஊரடங்குகளை சந்தித்த மதுரையில் தளர்வுகளுடன் கூடிய சாதாரண ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

`மதுரையில் வீழ்ந்தது டாஸ்மாக் விற்பனை; கைவிட்ட குடி மன்னர்கள்!’- அரசுக்கு 50 சதவிகிதம் வருமானம் `கட்’

ஜூலை 15-ம் தேதி முதல் தனது விற்பனையை துவக்கிய மதுரை டாஸ்மாக் கடைகளுக்கு பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. காலை 10 மணிக்கு கடை திறந்தது முதல் மாலை 6 மணி வரை சொற்ப அளவிலேயே குடிமகன்கள் வருகை உள்ளது. பெரிய அளவில் கூட்டம் வரும் என தடுப்புகள் எல்லாம் அமைத்து தடாலடி ஏற்பாடுகள் செய்திருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பகுதிகளின் டாஸ்மாக் விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1 கோடியை 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கணிசமான விற்பனை நடைபெறுவதாகவும் மற்ற நேரத்தில் கடை வெறிச்சோடி இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.

“கொரோனா தொற்று விழிப்புணர்வு மக்களிடத்தில் சென்றிருப்பதுதான் காரணம்’’ என்கின்றனர் டாஸ்மாக் மேலாளர்கள். மொத்தத்தில் டாஸ்மாக் கடையை மூடினால்தான் எங்களின் குடும்பம் காப்பாற்றப்படும் என்கின்றனர் பெண்கள்.