கொரோனா தாக்கிய உத்திரப் பிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்!

 

கொரோனா தாக்கிய உத்திரப் பிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்!

கொரோனா கடந்த 8 மாதங்களாக உலகையே அச்சுருத்து வருகிறது. இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அதன் தாக்கம் உள்ளது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. தினசரி மாலை வெளியிடப்படும் கொரோனா அப்டேட்டுகள் முந்தைய நாளை விட சற்றேனும் அதிகமாகவே இருக்கிறது.

கொரோனா தாக்கிய உத்திரப் பிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்!

உலகின் வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷியா போன்றவையே கொரோனாவைச் சமாளிக்கப் படாத பாடு படுகின்றன. இந்தியாவில் கொரோனாவால் இறப்பு விகிதம் குறைவுதான் என்றாலும் அச்சம் தணிந்தபாடில்லை. இப்போது ஒரு மாநில அமைச்சரே கொரோனாவுக்குப் பலியாகி விட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்று உத்திரப்பிரதேசம். அம்மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராகப் பணியாற்றிக்கொண்ண்டிருந்தவர் கமல் ராணி. நீண்ட காலம் அரசியல் அனுபவம் கொண்டவர்.

கொரோனா தாக்கிய உத்திரப் பிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்!

கமல் ராணிக்கு கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும் கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 62 வயதான கமல் ராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பத்து நாள் சிகிச்சையில் தேறி வந்தவர் திடீரென்று இன்று உயிரிழந்தார்.

உத்திரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ கமல் ராணிதான். இதுவரை உத்திரபிரதேசத்தில் 1677 பேர் கொரோனாவால் இறந்துள்ளார்கள்.

அமைச்சர் கமல்ராணிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கமல் ராணி. அவரின் மறைவுக்கு தலைவர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.