×

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது : பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக தகவல் !

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த பாஜக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்தது. இதனிடையே ராஜஸ்தான் சட்டபேரவையில் தனக்குப் பெரும்பான்மை இருப்பது நிரூபிப்பதற்காக பேரவையைக் கூட்ட
 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த பாஜக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்தது. இதனிடையே ராஜஸ்தான் சட்டபேரவையில் தனக்குப் பெரும்பான்மை இருப்பது நிரூபிப்பதற்காக பேரவையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் தலையிட்டு சச்சின் பைலட் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக நேற்று சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று சமாதான உடன்படிக்கையை கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூல்நிலைக்கிடையே ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர பாஜக  முடிவு செய்துள்ளது. ஆனால் சச்சின் பைலட் தற்போது சமாதானம் அடைந்துள்ளதால் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 125 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் கூறப்படுகிறது.