‘அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமியாகத் தான் இருக்க வேண்டும்’.. நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டிய அதிமுகவினர்!

 

‘அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமியாகத் தான் இருக்க வேண்டும்’.. நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டிய அதிமுகவினர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதனால் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக முக ஸ்டாலின் தான் போட்டியிடுவார் என்பது அனைவரும் அறிந்தவையே. ஆனால் அதிமுகவிலோ.. பழனிசாமி வேட்பாளராக நிற்பாரா அல்லது ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளராக நிற்பாரா என பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் தலைமையில், தேர்தலில் யார் வேட்பாளர்? என ஆலோசிக்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

‘அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமியாகத் தான் இருக்க வேண்டும்’.. நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டிய அதிமுகவினர்!

இந்த நிலையில், அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமியாகத் தான் இருக்க வேண்டும் என நெல்லை வண்ணாரப்பேட்டையில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர், பழனிசாமிக்காக ஆதரவு திரட்டியுள்ளார். ஆனால், யார் அடுத்த முதல்வராக போட்டியிடுவார்கள் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.