நண்பர்கள் திரும்பி வந்து விட்டார்கள்… ஒன்றாக பணியாற்றுவோம்… அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து அசோக் கெலாட்

நண்பர்கள் திரும்பி வந்து விட்டார்கள்… ஒன்றாக பணியாற்றுவோம்… அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்பட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கட்சியில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம். போன எங்கள் நண்பர்கள் இப்போது திரும்பி வந்து விட்டார்கள். எங்களது கருத்து வேறுபாடுகளை நீக்கிவிட்டு, மாநிலத்துக்கு சேவை செய்வதற்கான எங்கள் தீர்மானத் நிறைவேற்றுவோம் என நம்புகிறேன்.

நண்பர்கள் திரும்பி வந்து விட்டார்கள்… ஒன்றாக பணியாற்றுவோம்… அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து அசோக் கெலாட்

எம்.எல்.ஏ.க்கள் வருத்தப்படுவது இயல்பு. இந்த அத்தியாம், நிகழ்ந்த விதம் மற்றும் அவர்கள் ஒரு மாதம் தங்கயிருந்த விதம் இயல்பானது. தேசம், அரசு மற்றும் மக்களுக்கு சேவை செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் சில சமயங்களில் நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு விளக்கினேன். இந்த யுத்தம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது மற்றும் அது தொடரும். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்தனர். இது ராஜஸ்தான் மக்களின் வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நண்பர்கள் திரும்பி வந்து விட்டார்கள்… ஒன்றாக பணியாற்றுவோம்… அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சச்சின் பைலட் சந்தித்ததையடுத்து ராஜஸ்தான் அரசுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது.
நாளை ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.