இனம் காக்க இருமுனைப் போராட்டம்! – தமிழகமெங்கும் த.தே.பே. ஆர்ப்பாட்டங்கள்!

 

இனம் காக்க இருமுனைப் போராட்டம்! – தமிழகமெங்கும் த.தே.பே. ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாடு அரசு வெளி மாநிலத்தவரை அழைக்கக் கூடாது, தமிழர்களுக்கு வேலை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும், இந்திய அரசு கொண்டு வந்துள்ள
ஆரியத்துவ வர்ணாசிரமக் கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று 13.8.2020 – காலை 10 மணிக்கு,
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழகமெங்கும் “இனம் காக்க இருமுனைப் போராட்டம்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

தஞ்சையில் த.தே.பே. மாவட்ட செயலாளர் நா. வைகறை தலைமையில் தொடர்வண்டி நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. த.தே.பே. தலைவர்
பெ.மணியரசன் கண்டன உரை ஆற்றுகிறார்.

சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே த.தே.பே. நகரச்செயலாளர் இரா.எல்லாளன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.ஜ்பே.
பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றுகிறார்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் அசோக் பில்லர் மெட்ரோ அருகில் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல். ஆறுமுகம் தலைமையிலும், செங்கிப்பட்டி சாணூரப்பட்டி முதன்மைச்
சாலையில் பொதுக்குழு உறுப்பினர் இரெ. கருணாநிதி தலைமையிலும், புதுக்குடி தஞ்சை – புதுக்குடி முதன்மைச்சாலையில் பொதுக்குழு உறுப்பினர் க. காமராசு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தலைமைச்செயற்குழு இரெ. இராசு, தலைமையிலும், குடந்தை காந்தி பூங்கா அருகில் தலைமைச் செயற்குழு
க. விடுதலைச்சுடர் தலைமையிலும், பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் த.தே.பே. மூத்த தோழர், கு. மாசிலாமணி, தலைமையிலும்  புதுச்சேரி அண்ணா சாலை (ரத்னா திரையரங்கம்) அருகில் பொதுக்குழு உறுப்பினர் இரா. வேல்சாமி, தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஓசூர் இராம் நகர் அண்ணா சிலை அருகே நகரச்செயலாளர் பி. சுப்பிரமணியன் தலைமையிலும், தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் நகரச்செயலாளர்
க. விசயன், தலைமையிலும் திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை அருகில் ஒன்றியச்செயலாளர் இ. தனஞ்செயன், தலைமையிலும்,  கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் விளவை இராசேந்திரன், தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் குரும்பூர் முதன்மைச்சாலையில் தலைமைச் செயற்குழு மு. தமிழ்மணி, தலைமையிலும், புளியங்குடி காமராசர் சிலை அருகில் பொதுக்குழு  உறுப்பினர் க. பாண்டியன், தலைமையிலும், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் நகரச்செயலாளர் செ.அரவிந்தன் தலைமையிலும்,  மேலமைக் கேல்பட்டி அரியலூர் மாவட்டம் – மேலமைக்கேல்பட்டியில் ஒருங்கிணைப்பாளர் சி. சூர்யா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.