×

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி : ஆனால் ஒரு கண்டிஷன்… ! : கேரள அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. முக்கியமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இத்தகைய சூழலில் சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்காக நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கொரோனா நோய் தொற்று இல்லை என்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். மேலும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று காரணமாக அனைத்து நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.