சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்…. தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய கோயில் தந்திரி

சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்…. தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய கோயில் தந்திரி

நீண்ட இடைவெளிக்கு அண்மையில் கேரளாவில் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து மாதந்திர பூஜைக்காகவும், மாதந்திர திருவிழாவுக்காவும் சபரிமலை அய்யப்பன் கோயிலை திறக்க கோயில் நிர்வாகம் முடிவு எடுத்து இருந்தது. இதனால் அய்யப்பனை காணும் சந்தோஷத்தில் பக்தர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில், திடீரென சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க கூடாது என கோயில் தந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்…. தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய கோயில் தந்திரி

இது தொடர்பாக சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரி,தேவஸ்தானம் வாரிய அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாதந்திர பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க கூடாது. கோயில் திருவிழாக்களை தள்ளி வைக்க வேண்டும். கோவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் திருவிழாவில் கலந்து கொண்டால், கோயிலுடன் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும், மேலும் பாரம்பரியத்தின் படி சடங்குகள் முடிக்கப்படாது.

சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்…. தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய கோயில் தந்திரி

மேலும் தற்போதைய சூழ்நிலையில் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பது நோய் பரவுவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார். சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதி வேண்டாம் என்பதற்கு தந்திரி கூறியுள்ள காரணங்களை அனைத்தும் சாத்தியமானவை என்பதால் தேவஸ்தானம் சபரிமலை கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவையே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.