திறக்கப்படுகிறது சபரிமலை கோயில்!

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் பொதுமக்களுக்காக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா ஒழிப்பு பொது ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், மால்கள் அனைத்தும் மத்திய சுகாதார அமைச்சக அறிவுரையின்படி, பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 9ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ”வெர்ச்சுவர் க்யூ மேனேஜ்மெண்ட்” (VQM) சிஸ்டம் மூலம் முன்பதிவு செய்த 50 பக்தர்கள் வீதம் தரிசிக்க அனுமதித்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் எனவும் வெளி மாநில பக்தர்களும் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Most Popular

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

சமூக ஊடகத்தளமான ட்விட்டர் ,பேஸ் புக் ,இன்ஸ்டாக்ராமில் பிரபலங்களை லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர்வதை பார்த்து நாம் பிரமித்து போயிருக்கிறோம் .ஆனால் அதில் பல போலி கணக்குகள் என்றும் ,லட்சக்கணக்கான டாலர்களை கொட்டிக்கொடுத்து வாங்கப்பட்டவை என்றும்...

பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவச் சேர்க்கை, கலந்தாய்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று...

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுரு உடல் நலம் பெற்றதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனாத் தொற்று ஏற்படவே சென்னை அப்பல்லோ...

‘அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களும் ஒரே இடத்தில்” ஜியோ டிவி பிளஸ் அறிமுகம்!

வர்த்தகத்துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனங்களுள் ஒன்று ஜியோ. இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த முறை கொரோனா பாதிப்பால் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பேசிய...
Open

ttn

Close