புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

 

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்று புதிதாக 245 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5624 ஆக அதிகரித்திருக்கிறது. அதே போல 3000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து பின்னர் முடிவிடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இதனிடையே ஏனாம் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது அங்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் புதுச்சேரியின் கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கும் சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா இருந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணனும் கலந்து கொண்டதால் அவருக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது.