×

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி!

திருவண்ணாலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கிணற்றில் தவறி விழுந்து 6ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (11). இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுவன் கோபாலகிருஷ்ணன் (11), தனது அண்ணன் பார்த்திபன்(13) உள்ளிட்டோருடன், பாலாஜி நகரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கோபாலகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்த கிணற்றில்
 

திருவண்ணாலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கிணற்றில் தவறி விழுந்து 6ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (11). இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுவன் கோபாலகிருஷ்ணன் (11), தனது அண்ணன் பார்த்திபன்(13) உள்ளிட்டோருடன், பாலாஜி நகரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக கோபாலகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் முழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கூச்சலிடவே, அந்த பகுதி மக்கள், ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் அவர்கள் கோபாலகிருஷ்ணனை உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்டனர். தகவலறிந்த ஆரணி நகர போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.